search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கு சதவீதம்"

    • பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது.
    • திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34 தொகுதிகளில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

    சென்னையில் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளில் வடசென்னையில் 60.13 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இங்கு 64.23 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 4 சதவீதம் அளவுக்கு அங்கு வாக்குகள் குறைந்துள்ளன. தென் சென்னையில் 54.27 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

    இதில் தென் சென்னையில் 3 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 5 சதவீத ஓட்டுகளும் கடந்த தேர்தலைவிட குறைவாக பதிவாகியுள்ளன. திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் 68.31 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

    கடந்த தேர்தலில் இங்கு 72.33 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 71.55 சதவீத ஓட்டுகளும் ஸ்ரீபெரும்புதூரில் 60.21 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் 4 சதவீதம் அளவுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சதவீத வாக்குகளும் குறைந்துள்ளன.

    அரக்கோணத்தில் கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் அளவுக்கு குறைந்து 74.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கிருஷ்ணகிரி தொகுதியில் 71.31 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும்.

    தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு 2019-ம் ஆண்டு தேர்தலிலும் 82.33 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. இருப்பினும் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அளவுக்கு குறைவாகவே அங்கு வாக்கு பதிவாகி உள்ளது.

    திருவண்ணாமலை தொகுதியில் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 73.88 சதவீதமும், ஆரணியில் 3 சதவீத வாக்குகள் குறைந்து 75.65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாமக்கல் தொகுதியில் 78.16 சதவீத வாக்குகளும், ஈரோட்டில் 70.45 சதவீத வாக்குகளும், திருப்பூரில் 70.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது.

    இந்த 3 தொகுதிகளிலும் 3 சதவீதம் அளவுக்கு குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளன. நீலகிரி தொகுதியில் கடந்த தேர்தலில் 73.99 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.

    இது 5 சதவீதம் குறைவாகும். கரூர் தொகுதியில் ஒரு சதவீதம் குறைந்து 78.61-ஆக பதிவாகியுள்ளது. திருச்சியில் 2 சதவீத வாக்குகள் குறைந்து 67.45 ஆகவும், பெரம்பலூரில் 77.37 ஆகவும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கடலூரில் 76.48 ஆக இருந்த வாக்கு சதவீதம் 4 சதவீதம் குறைந்து 72.28 ஆக பதிவாகி இருக்கிறது.

    சிதம்பரம், மயிலாடுதுறையில் தொகுதிகளில் 2 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. சிதம்பரத்தில் 75.32 சதவீதமும் மயிலாடுதுறையில் 70.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

    நாகப்பட்டினத்தில் கடந்த தேர்தலில் 76.88 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 5 சதவீதம் குறைந்து 71.55 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சையில் 2 சதவீதம் குறைந்து 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சிவகங்கை தொகுதியில் கடந்த தேர்தலில் 69.87 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது அது 5 சதவீதம் குறைந்து 63.94 ஆக பதிவாகி உள்ளது.

    மதுரை தொகுதியிலும் 5 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. கடந்த தேர்தலில் 66.02 சதவீதமாக இருந்த வாக்குகள் தற்போது 61.92 சதவீதம் குறைந்துள்ளது. தேனி தொகுதியிலும் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 69.87 சதவீதம் பதிவாகியுள்ளன.

    விருதுநகர் தொகுதியில் 2சதவீத வாக்குகள் குறைந்து 70.17 சதவீதமாக பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் 68.35 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 68.18 சதவீதம் ஓட்டு போட்டுள்ளனர்.

    தூத்துக்குடியில் 69.43 ஆக இருந்த வாக்கு சதவீதம் 66.88 ஆக குறைந்துள்ளது. தென்காசியில் 71.37 ஆக இருந்த வாக்கு சதவீதம் 67.55 ஆகவும், நெல்லையில் 67.21 சதவீதமாக இருந்த வாக்குகள் 64.10 ஆகவும் குறைந்து உள்ளன. கன்னியாகுமரியில் 69.83 சதவீதமாக இருந்த வாக்குகள் 65.46 சதவீதமாக குறைந்துள்ளன.

    தமிழகத்தில் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைவிட தற்போதைய தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் 73.74 சதவீத வாக்குகளும் 2019-ம் ஆண்டு 72.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 69.46 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. வாக்கு சதவீதம் குறைவுக்கு கொளுத்தும் வெயில், தொடர் விடுமுறை ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

    மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போடாமல் தவிர்த்திருப்பது அரசியல் கட்சிகள் மீதான கோபத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். இது தேர்தல் முடிவின் போது எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது. மக்களின் இந்த தேர்தல் வெறுப்பு தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    குறைவான வாக்குப்பதிவுகளில் மத்திய சென்னை, மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், தேனி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் 5 தொகுதிகளின் வாக்கு சதவீதம் சற்று அதிகரித்தும் காணப்படுகிறது. வேலூர் தொகுதியில் 71.32 சதவீதமாக இருந்த வாக்குகள் 73.42 ஆக உயர்ந்துள்ளது.

    விழுப்புரத்தில் 74.56 ஆக இருந்த வாக்கு சதவீதம் 76.47 ஆகவும், கள்ளக்குறிச் சியில் 78.77 சதவீதமாக இருந்தது 79.25 ஆகவும், சேலத்தில் 77.86 ஆக இருந்த சதவீதம் 78.13 ஆகவும் கோவையில் 63.86 ஆக இருந்த வாக்கு சதவீதம் 64.81 ஆகவும் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவை தேர்தல் 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
    • தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவு.

    18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல்நடந்து முடிந்தது.

    நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்ற தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர்.

    தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று நண்பகலில் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    ×